இருவர் கொலை விவகாரம் அசாமில் இருவர் கைது| Dinamalar

இருவர் கொலை விவகாரம் அசாமில் இருவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கவுகாத்தி:வட கிழக்கு மாநிலமான, அசாமில், 24 மணி நேரத்தில், ரயில்களில், இரு பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இருவரை, போலீசார் கைது செய்தனர்.அசாம் மாநிலத்தில், முதல்வர், சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில், சமீபத்தில், திப்ருகர் - ரங்கியா எக்ஸ்பிரஸ் ரயில், அவாத் - அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில், கல்லுாரி மாணவி, ராதா குமாரி, 21, லலிமா தேவி, 48, ஆகியோர், முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர்.இந்த இரு கொலை சம்பவங்களும், 24 மணி நேரத்தில் நடந்தன. மேலும், இருவரது உடல்களும் ரயில்களின் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த இரு கொலைகளும் ஒரே மாதிரி உள்ளதால், இதில், 'சைக்கோ' நபருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அசாம் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய, பிகாஸ் தாஸ், பிபின் பாண்டே ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, போலீசார், பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை