சதுர்வேதிக்கு பதிலாக சோப்ரா 'டுவிட்டரில்' காங்., 'காமெடி| Dinamalar

சதுர்வேதிக்கு பதிலாக சோப்ரா 'டுவிட்டரில்' காங்., 'காமெடி

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான, 'டுவிட்டர்' பதிவில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக, நடிகை பிரியங்கா சோப்ரா இணைக்கப் பட்டதை அடுத்து, அந்த பதிவையே, காங்.,அகற்றியது.
விவசாயிகள், தங்கள் நிலத்தில் உள்ள மண்ணின் தரத்தை பற்றி அறிய, மண் பரிசோதனை அட்டை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 2015ல் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களின் தரம் பரிசோதிக்கப்பட்டு, அதில் என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும், என்ன உரங்கள் பயன்படுத்தலாம் என, விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தே.ஜ., கூட்டணி ஆட்சியில் தான், மண் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டதாக, பா.ஜ., பொய் பிரசாரம் செய்வதாக, காங்., குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, காங்., கட்சியின் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஒரு தகவல் பதிவிடப்பட்டது.
அதில், 'மண் பரிசோதனை மைய விவகாரத்திலும், நரேந்திர மோடி பொய் சொல்கிறார். 'ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போதே, 1,141 மண் பரிசோதனை மையங்கள் இருந்தன' என, பதிவிட்டு, அதில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் டுவிட்டர் முகவரி இணைக்கப்பட்டு இருந்தது.
காங்., செய்தி தொடர்பாளர், பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக, நடிகை பிரியங்கா சோப்ரா முகவரி இணைக்கப்பட்டதை அறிந்ததும், காங்., தலைமை, அந்த பதிவை உடனடியாக நீக்கியது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:34:19 IST Report Abuse
Bhaskaran என்ன செய்தாலும் தப்புத் தாப்பாகவே முடிகிறதே கட்சிக்கு போறாத காலமோ
Rate this:
Share this comment
Cancel
வண்டு முருகன் - வண்டலூர் ,இந்தியா
14-ஜூலை-201811:40:48 IST Report Abuse
வண்டு முருகன் சன்னி லியோன் படம் போட்டிருந்தா நெறய பேர் பாத்திருப்பாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை