இப்படியொரு பிரதமரா?| Dinamalar

இப்படியொரு பிரதமரா?

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இப்படியொரு பிரதமரா?
எந்த திட்டமும் இல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு சென்றார்; இது, சீனாவின் மறைமுகத் திட்டத்தின் படி தான், பிரதமர் அங்கு சென்றார். இந்திய வரலாற்றிலேயே, இப்படியொரு பிரதமரை பார்த்தது இல்லை; இது தான், பா.ஜ.,வின் ஆட்சி.
ராகுல் தலைவர், காங்.,
அரிய வாய்ப்பு!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், 'சோயாபீன்ஸ்' உள்ளிட்ட பொருட்களுக்கு, சீனா, அதிக வரி விதித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவுக்கு, ம.பி., உள்ளிட்ட மாநிலங்கள், சோயாபீன்சை அதிகளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
சீர்குலைத்து விட்டது!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய அமைதியை, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி சீர்குலைத்து விட்டது. இந்த கூட்டணி, மாநிலத்தை எப்படி நாசம் செய்தது என்பது, நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
ரன்தீப் சுர்ஜேவாலா மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201816:05:52 IST Report Abuse
Pasupathi Subbian காங்கிரஸ் காலத்தில் உருளை கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதி செய்து , அதற்க்கு தக்கபடி கொக்ககோலா இறக்குமதி செய்வதாக கூறி அமேரிக்கா உள்ளே வந்தது, இப்போது ஏற்றுமதியைவிட , இறக்குமதி அதிகமாகிவிட்டது, மேலும் உலக அமைப்புகளிடம் கடன் வாங்க அவர்கள் போட்ட கண்டிஷன் அனைத்துக்கும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு போட்டது காங்கிரஸ் அமைப்புதான்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201803:33:59 IST Report Abuse
ஆப்பு சில மில்லியன் டாலர் பெறுமான சோயாபீன்ஸை இறக்குமதி செய்துவிட்டு, பல பில்லியன் டாலர் பெறுமான சாமான்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது சீனா. சவுகான் வழிப்படியே நாமும் பல கோடிக் கணக்கான சீனப் பொருட்களை இங்கே இறக்குமதி செய்து, சில கோடி பெறுமான சோயாவை சீனாவுக்கு அனுப்புவோம். எப்பிடி வசதி?
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
14-ஜூலை-201811:36:20 IST Report Abuse
 Muruga Velபேசாம உங்களை சீனாவுக்கு ஏற்றுமதி பண்ணலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X