சாலையில் சிலிண்டர், 'சப்ளை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் சிலிண்டர், 'சப்ளை'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை : எரிவாயு உருளைகள், நேரடியாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது இல்லை. இதனால், வாடிக்கையாளர்கள், எரிவாயு உருளைகளை சாலையோரத்தில் நிறுத்தி வைத்து, முகவர்களின் வாகனங்களில் மாற்றிக் கொள்கின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், எரிவாயு உருளைகளை, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்வது இல்லை. பெரிய கிராமங்களில், ஊருக்கு பொதுவான பகுதி யில் வாகனங்களை நிறுத்தி வைத்து, எரிவாயு உருளைகளை முகவர்கள் வினியோகம் செய்கின்றனர்.குறிப்பிட்ட நாட்களில், வாடிக்கையாளர்கள், அந்த பகுதிகளில் மணிக்கணக்கில் காத்திருந்து, எரிவாயு உருளைகளை மாற்றிக் கொள்கின்றனர்.சிறிய கிராமங்களில், இந்த நடைமுறை இல்லை. அதனால், எரிவாயு உருளை வினியோகம் செய்யப்படும் நாட்களில், நெடுஞ்சாலையையொட்டி, எரிவாயு உருளைகளை நிறுத்தி வைக்கின்றனர்.முகவர்களின் வாகனங்கள் அந்த வழியாக செல்லும் போது, நிறுத்தி, புதிய உருளைகளை டெலிவரி செய்கின்றனர். எரிவாயு முகவர், வாகன ஓட்டிகளின் பார்வையில் படும்படியாக, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் உருளைகளால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.இதை தடுக்கவும், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு உருளைகளை டெலிவரி செய்யவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை