'அசோலா' தாவர பயிர்: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அசோலா' தாவர பயிர்: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி : கால்நடைகளுக்கு புரத சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை தரும், 'அசோலா' தாவரம் வளர்ப்பது குறித்து, மத்திய அரசின் மண்டல தீவன நிலையம், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனை வழங்குகிறது.விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவதால், கால்நடைகளின் மேய்ச்சல் பகுதி குறைந்து வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதில்லை. கால்நடை வளர்ப்போர் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவைக்கு, அதிக செலவிட்டு, உணவளிக்கின்றனர்.சோழவரம் அடுத்த, அலமாதியில் உள்ள மத்திய அரசின் மண்டல தீவன நிலையத்தில், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், தீவனப்பயிர்கள் வளர்ப்பது தொடர்பாக, ஆலோசனை வழங்கப்படுகிறது. அதில், 'அசோலா' என்ற தாவர பயிர் வளர்க்க, அவர்களை அறிவுறுத்துகிறது.இது குறித்து, மண்டல தீவன நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சிறிய நீர் நிரம்பிய தொட்டியில், அசோலாவை நாற்றுவிட்டு, 15 நாட்களில் வளர்த்து விடலாம். இதை அறுவடை செய்து கால்நடைகளுக்கு தரலாம். இதனால், 15 - 20 சதவீதம் கூடுதலாக பால் பெறலாம். தீவன செலவும், 35 சதவீதம் குறையும்.அசோலாவில், 90 சதவீதம் நீர்ச்சத்து, 30 சதவீதம் புரோட்டீன், 10 சதவீதம் அமிலோ அமிலங்கள், ஏ, பி2 வைட்டமின்கள், காரட்டீன், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன. அசோலா தீவனம் குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை