பெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி : பெரியகடம்பூர் இ - சேவை மையம், ஆறு மாதங்களாக செயல்படாததால், அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல், பயனாளிகள் சிரமப்படுகின்றனர்.

திருத்தணி ஒன்றியம், பி.சி.என்.கண்டிகையில், பெரியகடம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. இந்த வங்கி கட்டடத்தில், இ - சேவை மையம் செயல்பட்டு வந்தது.

சான்றுகள் :இங்கு, பெரியடம்பூர், கன்னிகாபுரம், சின்னகடம்பூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல்பட்டதாரி, பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகளை பெற்றனர். ஆறு மாதங்களாக, இந்த வங்கியில் இயங்கும் சேவை மையம் செயல்படாததால், கிராம மக்கள் எவ்வித சான்றுகளும் பெற முடியவில்லை.

அதே போல், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரியில் திருத்தம் செய்ய முடியாமல், பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஜாதி சான்றுகள் பெற முடியாமல், மேற்கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு :சான்று பெறுவதற்காக தற்போது, திருத்தணிக்கு சென்று விண்ணப்பிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் இருந்து, திருத்தணிக்கு, போதிய பேருந்து வசதியும் முறையாக இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பெரிய கடம்பூர் சேவை மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை