நடவடிக்கை இல்லை; காவல் நிலையம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடவடிக்கை இல்லை; காவல் நிலையம் முற்றுகை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோழவரம் : சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.சோழவரம் அடுத்த, காரனோடை பகுதியைச் சேர்ந்தவர்கள், விஷால், 24, சாந்திலால், 46, ஹேமகுமார், 46; இவர்கள் மூவரும் மொபைல் போன், உரக்கடை, அடகுகடை வைத்து உள்ளனர்.நேற்று முன்தினம், நண்பர்கள் மூவரும், சென்னை சென்று, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லுார் சுங்கச்சாவடிக்கு, காரில் வந்தனர்.சுங்கச்சாவடி ஊழியர், காருக்கு கட்டணம் செலுத்த கூறினார். உள்ளூர் வண்டிதான் எனக்கூறி, விஷால் மற்றும் நண்பர்கள் கட்டணம் செலுத்த மறுத்தனர்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர், விஷால், சாந்திலால், ஹேமகுமாரை பலமாக தாக்கினர். காயம் அடைந்த மூவரும், இது தொடர்பாக, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று, காரனோடையைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் சோழவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X