ரூ.2 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, ஆக்கிரமிப்புக்கு உள்ளான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, வருவாய் துறையினர் மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்போருக்கு, தீவனம் வழங்கும் வகையில், அரசிடம் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து, விவசாயம், கட்டடம் கட்டி வருகின்றனர். இதனால், கால்நடைகள், இரையை தேடி விளைச்சல் நிலங்களை நோக்கி செல்வதால், பல சிரமங்கள் ஏற்படுகின்றன. திருவள்ளூர் வட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.இதையடுத்து, திருவள்ளூர் சார் ஆட்சியர் ரத்னா மேற்பார்வையில், வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய் துறையினர், திருவள்ளூர் வட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.முதற்கட்டமாக, புன்னப்பாக்கம் கிராமத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலம், 5 ஏக்கரை வளைத்து, கட்டடம் கட்ட முயன்றதை, வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் அதிரடியாக முடக்கி, கட்டடத்தை, ஜே.சி.பி., மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்; இதன் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய் என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X