கோஷ்டி மோதல் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல் இருவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி : கோஷ்டி மோதல் தகராறில், மூவர் காயமடைந்தனர்; இருவரை போலீசார் கைது செய்தனர்.திருத்தணி அடுத்த, தும்பிக்குளம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நேதாஜி, 26. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரத்னம் மகன் பாபு, 38, என்பவருக்கும் இடையே, நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், நேதாஜி ஆதரவாளர்கள், பாபு ஆதரவாளர்கள், இரு கோஷ்டிகளாகி, உருட்டு கட்டை, இரும்பு கம்பிகளால் தாக்கி கொண்டனர். இதில், கண்ணம்மா, நேதாஜி, பாபு ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தோர், திருத்தணி அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இரு தரப்பினர் புகாரின்படி வழக்கு பதிந்த திருத்தணி போலீசார், பாபு, 38, சேகர், 45, ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான எட்டு பேரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X