சோழவரம் முருகன் கோவிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோழவரம் முருகன் கோவிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சோழவரம் : சோழவரம் அருகே, தங்கவேல் முருகன் கோவிலில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எடப்பாளையத்தில், தங்கவேல் முருகன் கோவில் உள்ளது.
புகார் :
இந்த கோவிலை, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சிவகுமார், 75, என்பவர் கட்டியுள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி, கோவிலை பராமரிக்கிறார். இக்கோவிலில், கற்சிலையால் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வீற்றுள்ளார். 1 அடி உயரமும், 1 கிலோ எடையும் உடைய, முருகன் மரகத சிலையும் இருந்தது.
வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், மூலவர் சன்னதியில் வைத்து, மரகத சிலைக்கும் அபிஷேகம் நடைபெறும் என, கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமானதாக, கோவில் நிர்வாகி சிவகுமார், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவில் நிர்வாகி சிவகுமார் தெரிவித்ததாவது: முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது, மரகத சிலை கிடைத்தது. இதனால், இங்கேயே முருகன் கோவில் கட்டி, பராமரிக்கிறேன்.
விசாரணை :
நேற்று காலை, பூஜைக்காக, வெள்ளி தட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலுடன் இருந்த மரகத சிலை மாயமாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். திருடு போன மரகத சிலை, பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என, கூறப்படுகிறது. சோழவரம் போலீசாரும், சிலை கடத்தல் பிரிவு போலீசாரும், தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X