பசுமை திட்ட சாலை நில அளவீடு நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை திட்ட சாலை நில அளவீடு நிறைவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்திரமேரூர் : -சென்னை - சேலம் எட்டுவழி பசுமை திட்ட சாலைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலம் அளவீடு பணி, நேற்றுடன் நிறைவு பெற்றது.சென்னை - சேலம் எட்டுவழி பசுமை திட்ட சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59கி. மீட்டரில் அமைகிறது. இதற்காக, அரசு புறம்போக்கு நிலங்கள், வன நிலங்கள் மற்றும் தனியார் நிலங்கள் என மொத்தம், 316 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. கடந்த, 10ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவீடு பணிகள் துவங்கின. செங்கல்பட்டு மற்றும் உத்திர மேரூர் தாலுகாவிலும், நில அளவீடு நடந்தது.நேற்று, மணல்மேட்டில் துவங்கி சிலாம்பாக்கம், அழிசூர், மானாம்பதி உள்ளிட்ட கிராமங்களில், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜிவ் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி தலைமையிலான குழுவினர், ஜி.பி.எஸ்., கருவியால் நிலங்களை அளந்து, கற்கள் நட்டனர். மாலை, 5:00 மணிக்கு, பெருநகர் அருகே, காஞ்சிபுரம் மாவட்ட நிலம் அளவீடு பணி நிறைவு பெற்றது.மாவட்டத்தில், பசுமை சாலை திட்ட நில அளவீட்டில், 20க்கும் குறைவான வீடுகளே பாதிப்புக்கு உள்ளாகின. இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு, அடுத்த சில நாட்களில், வீட்டுமனை பட்டாவுடன், பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் ஆவணம் வழங்க உள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை