மாடுகளால் பயிர்கள் நாசம்; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடுகளால் பயிர்கள் நாசம்; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி : மேய்ச்சலுக்கு வரும் மாடுகள், விளைநிலங்களில் புகுந்து நெற்பயிரை நாசமாக்குவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று அவர்கள், ஆர்ப்பாட்டம் செய்தனர். பொன்னேரி அடுத்த, கம்மார்பாளையம், சின்னமனோபுரம், பெரிய மனோபுரம், கொளத்துார், பெரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில், 2,000 ஏக்கர் பரப்பளவில், சொர்ணவாரி பருவத்திற்கு, நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களை, பழவேற்காடு பகுதியில் இருந்து, மேய்ச்சலுக்கு வரும் எருமை மாடுகள் நாசப்படுத்துகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய் துறை, காவல் துறை, வேளாண் துறையினரிடம், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லை.இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்களை நாசப்படுத்தும் மாடுகளால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர். வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தெடார்ந்து, விவசாயிகள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை