மிக பயங்கரமான விளைவுகள் ஏற்படும் பா.ஜ.,வுக்கு மெஹபூபா எச்சரிக்கை| Dinamalar

மிக பயங்கரமான விளைவுகள் ஏற்படும் பா.ஜ.,வுக்கு மெஹபூபா எச்சரிக்கை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீநகர்:''மத்திய அரசு, மக்கள் ஜனநாயக கட்சியில் பிரிவினையை உண்டாக்க முயற்சித்தால், மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., சமீபத்தில் விலக்கியது.இதையடுத்து, மெஹபூபா ஆட்சி கவிழ்ந்தது. தற்போது காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்கள், மெஹபூபா முப்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கி உள்ளனர்.இந்த அதிருப்தி, எம்.எம்.ஏ.,க்களை ஒருங்கிணைது, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, பா.ஜ., முயற்சித்து வருவதாக, மெஹபூபா சந்தேகம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், மெஹபூபா முப்தி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:மக்கள் ஜனநாயக கட்சிக்குள் பிரச்னைகள் இல்லை என சொல்லவில்லை. எல்லா வீடுகளிலும் உள்ளதைப் போல, எங்கள் கட்சிக்குள்ளும் பிரச்னைகள் உள்ளன; அதை, எங்களுக்குள் பேசி தீர்ப்போம்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்க, மத்திய அரசு முயற்சித்தால், காஷ்மீரில் பிரச்னை பெரிதாகும்.

இங்கு, 1987ல் நடந்ததைப் போல, மக்களின் ஓட்டுரிமையை, மத்திய அரசு பறிக்க நினைத்தால், அது பிரிவினைவாதத்தை உருவாக்கும். காஷ்மீரில், பயங்கரவாத குழுக்களை உருவாக்கிய, சலாஹுதின் மற்றும் யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மீண்டும் பிறந்து வருவர். மத்திய அரசு, மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வண்டு முருகன் - வண்டலூர் ,இந்தியா
14-ஜூலை-201806:31:57 IST Report Abuse
வண்டு முருகன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக இருந்த பண்டிட்கள் கேஷ்மீரை விட்டு வெளியேற்ற்றப்பட்டனர் ...தாமாகவே எதிர்காலத்தை பற்றி கவலை பட்ட படித்த பண்டிட்களும் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர் . பொருளாதாரத்துக்கு ஆதாரமான சுற்றுலா துறையை தீவிர வாதத்தால் அழியும் நிலை ...பொதுமக்கள் வருமான வரி ..மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்துவதில்லை ...விவரமறிந்த சில படித்த குடும்பங்கள் கேஸ்மீருக்கு செல்வதில்லை ...மத்திய அரசின் மானியத்தில் பொருளாதாரம் ...கிட்டத்தட்ட கேன்சர் பேஷண்ட் நிலைமையில் கேஷ்மீர் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை