நிலக்கரி சுரங்க ஊழல் ஜிண்டாலுக்கு சிக்கல்| Dinamalar

நிலக்கரி சுரங்க ஊழல் ஜிண்டாலுக்கு சிக்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, தொழிலதிபரும், காங்., முன்னாள், எம்.பி.,யுமான, நவீன் ஜிண்டால் உட்பட, ௧௨ பேர் மீது, கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, ஜார்க்கண்ட், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், நிலக்கரி சுரங்க உரிமங்கள், விதிமுறைகளை மீறி, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இதில், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் மின் நிறுவனத்துக்கு, ஜார்க்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, ஜிண்டால் நிறுவன அதிபர் நவீன் ஜிண்டால், மத்திய நிலக்கரித்துறை முன்னாள் இணை அமைச்சர் தாசரி நாராயணராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உட்பட, 13 பேர் மீது, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அப்போது, இவர்களுக்கு எதிராக, லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், தாசரி நாராயண ராவ், 2017ல் காலமானார். அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பரத் பராஷர் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட, 12பேர் மீதும், லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு பதிவு செய்யும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை