பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி| Dinamalar

பயங்கரவாதிகள் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள, அசாபால் சோவ்க் பகுதியில் நேற்று, மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு பணியில் ஈடுபட்ட வீரர்கள் மீது, பயங்கரவாதிகள், மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த பகுதி யில் பதற்றம் நிலவுவதை யொட்டி, பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு, லஷ்கர் - இ - தொய்பா பயங்கர வாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X