'சசி தரூர் முகத்தில் கரி பூசினால் பரிசு'| Dinamalar

'சசி தரூர் முகத்தில் கரி பூசினால் பரிசு'

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆக்ரா:'காங்., - எம்.பி., சசி தரூர் முகத்தில் கரி பூசுபவர்களுக்கு, சன்மானம் வழங்கப்படும்' என, முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சசி தரூர். காங்., - எம்.பி.,யான இவர், 'அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என, கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், உ.பி., மாநிலம், அலிகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் சங்கம் என்ற அமைப்பின் தலைவர், முகமது அமிர் ரஷீத், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:காங்., ஆதரவுடன் தான், இந்த பொறுப்பற்ற கருத்தை, சசி தரூர் பேசியுள்ளார்.
இந்த கருத்து, ஹிந்துக்களை மட்டும் அல்லாது, இந்தியாவை நேசிக்கும் முஸ்லிம்களையும் காயப்படுத்தி உள்ளது. ஒற்றுமையுடன் வாழும், ஹிந்து - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், நாடு வளர்ச்சி அடைவதை விரும்பாத, காங்., கட்சியினர், இப்படியெல்லாம் பேசி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சசி தரூர் முகத்தில் கரி பூசுபவர்களுக்கு, 11 ஆயிரம் ரூபாய், சன்மானம் வழங்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
14-ஜூலை-201814:17:06 IST Report Abuse
Mohammed Abdul Kadar சும்மா பாவனை ..இவனும் ஒரு விளம்பரதாரி , பிஜேபி பானையில் ,நாக்கை வெட்டுவேன் , மூக்கை வெட்டுவேன் என்பது போல் ரஷீத் அறிக்கை உள்ளது
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
14-ஜூலை-201813:21:12 IST Report Abuse
I love Bharatham எங்க இருக்கான் சொல்லுங்க .....கரி மட்டும் அல்ல ...பாகிஸ்தான் கூட அனுப்பலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜூலை-201812:58:32 IST Report Abuse
Devanatha Jagannathan ரொம்ப கம்மி கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை