கேரளா செல்லும் ரயிலில் 108 சிறுவர்கள் மீட்பு| Dinamalar

கேரளா செல்லும் ரயிலில் 108 சிறுவர்கள் மீட்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தன்பாத்:ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கேரளா செல்லும் ரயிலில் அழைத்து வரப்பட்ட, 108 சிறுவர்களை, ரயில்வே போலீசார் மீட்டனர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம், இங்குள்ள தன்பாதில் இருந்து, கேரள மாநிலத்துக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த, 108 சிறுவர்களை, போலீசார் மீட்டனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும், 6 - 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும், ஜார்க்கண்ட் மாநில குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களுடன் வந்த ஆறு பேரிடம் விசாரித்தபோது, ஜார்க்கண்டில் இருந்து, தெலுங்கானா மாநிலம், ஜாம்தாரா மாவட்டத்தில் உள்ள, மதரசாவுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதாக கூறினர். அதற்கான ஆவணங்களை காட்டாததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த சிறுவர்களுக்கு, ஆந்திராவின் விஜயவாடா, தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரும், குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை