நினைவு சின்னங்களில் படம் எடுக்க தடை நீக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நினைவு சின்னங்களில் படம் எடுக்க தடை நீக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:பிரதமரின் உத்தரவை அடுத்து, இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள, குறிப்பிட்ட சில நினைவுச் சின்னங்களை தவிர, மற்றவற்றில், புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறையின் கீழ், 3,686 நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டது. தொல்லி யல் துறையின் அனுமதியுடன், தொழில் முறை புகைப்பட கலைஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம், டில்லியில், தொல்லியல் துறையின் புதிய தலைமை அலுவலகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசிய போது, 'நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என்றார்.பிரதமரின் அறிவுரையை ஏற்று, தொல்லியல் துறையின் கூடுதல் பொது இயக்குனர், ஊர்மிளா சந்த் சர்மா பிறப்பித்துள்ள உத்தரவு:

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, அஜந்தா - எல்லோரா குகைகள், தாஜ்மஹாலின் முக்கிய கல்லறை மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, லே அரண்மனை ஓவியங்களை தவிர, மற்ற அனைத்து நினைவிடங்களை புகைப்படம் எடுக்க, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை