மனைவி விரல்கள், 'கட்' கொடூர கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி விரல்கள், 'கட்' கொடூர கணவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்:குடும்ப பிரச்னையில், கத்தியால் வெட்டி மனைவியின் கை விரல்களை துண்டாக்கிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்குமார், 42; மனைவி பூங்கொடி, 38; தொடக்கப் பள்ளி சத்துணவு பொறுப்பாளர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார்.கொணக்கம்பட்டு, பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு, பஸ்சை விட்டு இறங்கிய பூங்கொடி, பேருந்தை நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வளர்குமாருக்கும், பூங்கொடிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வளர்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், பூங்கொடியின் தலை மற்றும் இரண்டு கை பகுதிகளில் வெட்டினார். இதில், வலது கையின், கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் துண்டாகின. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.மனைவியை வெட்டிய வளர்குமார், மயிலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X