குழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பல்லடம்:திருப்பூர் அருகே, இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்த தாய், தீக்குளித்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.
திருப்பூர் மாவட்டம், பூமலுாரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 37. சைசிங் மற்றும் வைண்டிங் மில் நடத்தி வருகிறார். தி.மு.க., பிரமுகரான இவர், பூமலுார் ஊராட்சி தலைவராக, இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இவரது மனைவி சிவரஞ்சனி, 32.இவர்களுக்கு, 7 வயதில் மகன், 8 மாத பெண் குழந்தை உள்ளது. தொழில் நிமித்தமாக, வெளியூர் சென்ற தியாகராஜன், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

கதறல்

இதைக் கேட்டு, தியாக ராஜன் மற்றும் அவரது மில்லில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், ஓடி வந்தனர். அப்போது, உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், சிவரஞ்சனி தண்ணீர் தொட்டி நோக்கி ஓடி, கீழே விழுந்தார்.தியாகராஜன் வீட்டுக்குள் சென்று, குழந்தைகளை தேடியுள்ளார். குழந்தைகள் இல்லை. தரை மட்ட தண்ணீர் தொட்டியில், குழந்தைகள் பிணமாக மிதந்ததை பார்த்து, கதறி அழுதார்.உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்தேகம்

மங்கலம் போலீசார் கூறியதாவது:தியாகராஜன், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்த போது, தரைமட்ட தொட்டியில், சிவரஞ்சனி தண்ணீர் நிரப்பி உள்ளார்.இரவு, 10:00 மணிக்கு தியாகராஜன் வந்ததும், அனைவரும் உறங்கசென்றுள்ளனர்.நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், இரண்டு குழந்தைகளையும், தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்து விட்டு, சிவரஞ்சனி பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டதாக சந்தேகிக்கிறோம்.

யாரும் காரணமில்லை

சிவரஞ்சனி அளித்த வாக்குமூலத்தில், 'யாரும் காரணமில்லை. வயிற்றில், கல் தொந்தரவு இருந்ததால், இந்த முடிவு எடுத்தேன்' என கூறியுள்ளார். ஆயினும், தியாகராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X