'காவல் துறையில் சீர்திருத்தம் தேவை'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'காவல் துறையில் சீர்திருத்தம் தேவை'

Added : ஜூலை 14, 2018
Advertisement

பெங்களூரு:''தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில், காவல் துறையில் விஞ்ஞான ரீதியான சீர்திருத்தங்கள் தேவை,'' என, கர்நாடக மாநில ஊர்க்காவல் படை, ஐ.ஜி., ரூபா தெரிவித்துள்ளார்.
இந்திய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, சமீபத்தில் தேர்வு நடந்தது. 122 பேர் எழுதியதில், 119 பேர் தோல்வி அடைந்தனர். மூன்று பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
சவால்கள்
இது தொடர்பாக, கர்நாடக மாநில, ஊர்க்காவல் படை, ஐ.ஜி., ரூபா அளித்த பேட்டி:சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்திய போலீஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படும்.அப்போது, துப்பாக்கி சுடுதல், ஸ்கூபா டைவிங், குதிரை ஓட்டம், மலை ஏறுதல், ஜிம்னாஸ்டிக் என, பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படும். சவால்களை எதிர்கொள்ளும் திறமை கற்றுத் தரப்படுகிறது.
நான் பயிற்சி பெற்ற போது இருந்த பாடத் திட்டங்களுடன், தற்போது கூடுதலாக பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.பயிற்சி அளித்தும், எப்படி தேர்வில் தோற்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.நேரில் சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ப, பயிற்சி முறையையும் மாற்ற வேண்டும் என்பது, என் தனிப்பட்ட கருத்து. பணியிலுள்ள போது, அரசியல்வாதிகளின் சட்ட விரோத உத்தரவுகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது.
ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது.பொதுவாக ஒவ்வொரு அதிகாரியும், அவர்களின் அனுபவத்துக்கு ஏற்ப, சவால்களில் வெற்றி பெற வேண்டுமென, புதிய புதிய உத்தரவுகளைபிறப்பிப்பர்.உதாரணத்துக்கு, ஒரு அதிகாரி, இரவில் பைக் மூலம் ரோந்து சென்றால், கொள்ளையர்களை பிடிக்க முடியும் என்பார். மற்றொருவர், நடந்து சென்றால் தான், பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் எனக் கூறுவார்.
எனவே, அனைத்து போலீசாருக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது; எது தேவை, எது தேவையில்லை என, விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சுற்றுப்பயணம்

அரசு பணத்தில்அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குசுற்றுப்பயணம் செய்து, அந்த நாடுகளின் போலீசார், எப்படி செயல்படுகின்றனர் என தெரிந்து கொள்கிறோம்.அனைத்து வித பயிற்சியையும் கவனமாக கற்க வேண்டும். உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது, பழைய கதைகளை தான் நமக்கு சொல்வர்.இதற்கு பதிலாக, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, போலீஸ் நடைமுறை கொள்கைகள் மாற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை