ஜாக் மாவை முந்தினார் அம்பானி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜாக் மாவை முந்தினார் அம்பானி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:சீனாவின், அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் முதல் பணக்காரராக, ரிலையன்ஸ் நிறுவனத்தின், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளதாக, 'புளூம்பர்க்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்டை நாடான சீனாவின் அலிபாபா என்ற இணைய வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும், ஜாக் மா, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தில், நீண்ட காலமாக இருந்து வந்தார்.இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், ஒரே நாளில், 1.6 சதவீதம் உயர்ந்ததால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது.
இதையடுத்து, சீனாவின் ஜாக் மாவை பின்னுக்க தள்ளி, ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை, முகேஷ் அம்பானி பிடித்துஉள்ளதாக, 'புளூம்பர்க்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் மட்டும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை