பழைய பழ மார்க்கெட் இடிப்பு: வேகமெடுக்கிறது மேம்பாலப்பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பழ மார்க்கெட் இடிப்பு: வேகமெடுக்கிறது மேம்பாலப்பணி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை:உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி துவங்கியதை அடுத்து, உக்கடத்தில் உள்ள பழைய பழ மார்க்கெட் கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன.உக்கடம்- - ஆத்துப்பாலம் இடையே, 1.9 கி.மீ., துாரம் கொண்ட சாலையில், 121.82 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த மாதம் துவங்கியது.
நில ஆர்ஜிதம் முடிவதற்கு முன்பே, நில உரிமையாளர்களின் அனுமதியையும், ஒப்புதலையும் பெற்று, மேம்பால கட்டுமானப் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலத்தை தாங்கி நிற்கும் துாண்கள் அமைக்கும் பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. கரும்புக்கடையில் துவங்கும் மேம்பாலம், உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் நிறைவடைகிறது.
பாலம் நிறைவடையும் பகுதியில் மாநகராட்சி வணிக வளாகம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தில் பழக்கடைகள், துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன. 24 பழக்கடைகள், நான்கு இறைச்சி கடைகள் என, 28 கடைகள் செயல்பட்டு வந்தன. மேம்பாலப் பணிக்காக இக்கட்டடம் இடிக்க திட்டமிடப்பட்டது.உக்கடம் கழிவுநீர் பண்ணைக்கு அருகில் புதிதாக துவங்கப்பட்ட மார்க்கெட்டுக்கு பழக்கடைகள் மாற்றப்பட்டன.
வணிக வளாகம் காலியானதையடுத்து, ஒரே நாளில் இடிக்க மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் திட்டமிட்டனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில் ரத்தினம், உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர் முன்னிலையில், 'பொக்லைன்' துணையுடன் வணிக வளாகம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அவ்விடம், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை