புகையிலை பொருட்கள் பதுக்கிய குடோனுக்கு, 'சீல்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருட்கள் பதுக்கிய குடோனுக்கு, 'சீல்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:கோவையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை தாமஸ் வீதியில் வாகரம் என்பவருக்கு சொந்தமான குடோனில், 250 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது, நேற்று நடத்திய ஆய்வில் தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததும், மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தடை செய்த புகையிலை பொருட்கள் என்பது உறுதியானால், சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடரப்படும். பறிமுதல் செய்துள்ள புகையிலை பொருட்கள், குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைக்கப்படும்,'' என்றார்.
பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வராத வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில், முறையாக அழிக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை