வருமான வரி கணக்கு வழக்கு ஜெயலலிதா மனு தீர்ப்பு தள்ளிவைப்பு - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வருமான வரி கணக்கு வழக்கு ஜெ., மனு தீர்ப்பு தள்ளிவைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு எதிரான வருமான வரி கணக்கு வழக்கை, ரத்து செய்யக் கோரிய மனுக்களின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடந்த, 1991 முதல், 1995ம் ஆண்டு வரையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என, ஜெயலலிதா, சசிகலா, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ்' நிறுவனங்களுக்கு எதிராக, சென்னை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருமான வரித் துறை, இந்த வழக்குகளை தாக்கல் செய்தது. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய, அனைவரும் ஆஜராகும்படி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா மற்றும் நிறுவனங்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் தரப்பில் அபராத தொகை செலுத்தப்பட்டதால், எழும்பூர் நீதிமன்றத்தில், வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், அசோகன் உள்ளிட்டோர் ஆஜராகினர். நால்வருக்கு எதிரான வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டதாக, வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின்உத்தரவை, நீதிபதி நிர்மல்குமார் தள்ளிவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X