சிலைகள் பாதுகாப்புக்கு கூடுதல் அறைகள் ஓராண்டுக்குள் முடிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலைகள் பாதுகாப்புக்கு கூடுதல் அறைகள் ஓராண்டுக்குள் முடிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சென்னை:கோவில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க, கூடுதல் அறைகள் கட்டுவதை, ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அரசு தரப்பில், இதுகுறித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ., விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர், ஜி.ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி மகாதேவன், சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழுவை நியமித்தார்.குழுவுக்கு தேவையான வசதிகளை அளிக்கவும், சிலைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றவும், அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சிலைகள் தான், காணாமல் போகின்றன.

'சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.இதையடுத்து, கடந்த முறை நடந்த விசாரணையின்போது, 'நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலைகள் திருட்டும் தொடர்கின்றன. 'இத்தகைய நிலை தொடர்ந்தால், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டியது வரும்' என, நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் தாக்கல் செய்த அறிக்கையில், 'தமிழகத்தில், ௧௧ ஆயிரத்து ௫௧௨ கோவில்களில், சிலைகளை பாதுகாப்பாக வைக்க, அறைகள் உள்ளன. 'கூடுதலாக, 3,000 அறைகள் கட்ட வேண்டியுள்ளது. அதற்கு, 2021ம் ஆண்டு வரை, அவகாசம் வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை வாசித்த பின், நீதிபதி மகாதேவன், ''அரசு தரப்பில் கோரியபடி அவகாசம் அளித்தால், மீதி உள்ள சிலைகள், காணாமல் போவதும் தொடரும்; இங்கு, கான்ட்ராக்டர்கள் நிறைய பேர் உள்ளனர்.''இப்போது துவங்கினால் கூட, ஓராண்டுக்குள் அறைகளை கட்டி முடிக்கலாம். இவ்வளவு காலதாமதம் சரியல்ல. உத்தரவை பின்பற்றவில்லை என்றால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும்,'' என்றார்.
தொடர்ந்து, நீதிபதி கூறியதாவது:சிலைகள் பாதுகாப்பு குறித்து, 2017 ஜூலையில், இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சிலை கள் பாதுகாப்பாக வைக்க,100சதுர அடி அளவில், அறைகள் கட்ட வேண்டும்.

கோவில் சிலைகள் பாதுகாப்பு விஷயத்தில், மெத்தனம் காட்டப்படுகிறது. பாதுகாப்பு அறைகள் கட்டுவது தொடர்பாக, போலீசாரிடம் ஆலோசித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகள் குறித்து, புதிதாக அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இந்த வழக்கு விசாரணையை, ௩௦ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அளித்த புகார் குறித்து, தமிழக அரசு, 20ம் தேதி பதில் அளிக்கவும், நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201803:46:13 IST Report Abuse
ஆப்பு சிலை எவனாவது கடத்தி பிடிபட்டா 3 நாளில் தூக்குன்னு சட்டம் போடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X