நடிகையிடம் அத்துமீறல் புரோக்கர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகையிடம் அத்துமீறல் புரோக்கர்கள் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:நடிகையை, பாலியல் தொழிலுக்கு அழைத்த, இரண்டு புரோக்கர்களை, போலீசார் கைது செய்துஉள்ளனர்.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர், ஜெயலட்சுமி; பிரிவோம் சந்திப்போம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:சில தினங்களுக்கு முன், என், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, 'நீங்கள், வி.ஐ.ஐ.பி.,களுடன், 'டேட்டிங்' வர சம்மதித்தால், தினமும், மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
நண்பர்கள் உதவியுடன், அவர்களை தொடர்பு கொண்டபோது, தங்கள் மூலம், பிரபல நடிகையர் சிலரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து,விபசார தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, இருவரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், பாலியல் தொழில் புரோக்கர்கள் என்பதும் தெரிய வந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை