தந்தை வெட்டி கொலை 'குடிகார' மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை வெட்டி கொலை 'குடிகார' மகன் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோளிங்கர்:ஓய்வு பெற்ற வன ஊழியரை, வெட்டிக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், காட்டுப்பாக்கம் மேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 65; ஓய்வு பெற்ற வன ஊழியர். இவரது மகன் சாந்தசீலன், 37. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
சாந்தசீலன் வேலைக்கு செல்லாமல், தினமும் மது அருந்தி விட்டு, தந்தையிடம் பணம் கேட்டு வந்தார். பானி பூரி கடை வைக்க, 1.50 லட்சம் ரூபாயை கேட்டு, சில நாட்களாக, தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, துாங்கிக் கொண்டிருந்த மாசிலாமணியை எழுப்பி, பணம் கேட்டார். கொடுக்க முடியாது என அவர் கூறினார். ஆத்திரமடைந்த சாந்தசீலன், கத்தியால் தந்தையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். மாசிலாமணி, அதே இடத்தில் இறந்தார்.
பாணாவரம் போலீசார், கோவிந்தாங்கல் கிராமத்தில் பதுங்கியிருந்த சாந்தசீலனை கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை