2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:கணவரின் சந்தேகத்தால் மகன், மகளை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் ராஜா, 38; கறிக்கோழி வாகன டிரைவர். இவரது மனைவி மைக்கேல் ஜீவா, 35. இவர்களுக்கு, 4 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.
மனைவி நடத்தை மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு சென்ற ராஜா, நேற்று காலை, 8:45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, ஜீவா துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். முகத்தில் பாலிதீன் கவரால் மூடப்பட்ட நிலையில், மகனும், மகளும் இறந்து கிடந்தனர்.

போலீசார் கூறியதாவது:பள்ளி ஒன்றில், ராஜா டிரைவராக இருந்த போது, பஸ் கண்டக்டராக, மைக்கேல் ஜீவா இருந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட, கலப்பு திருமணம் செய்து கொண்டனர். மனைவி நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட, குடும்பத்தில் புயல் வீசியது.இதனால், மைக்கேல் ஜீவா கடிதம் எழுதி வைத்து, அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மகன், மகளின் கைகளை கட்டி, இருவரின் முகத்தையும் கவரால் மூடி, கொலை செய்துள்ளார். பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர். ராஜாவிடம் விசாரணை நடக்கிறது.

'கொள்ளி போடக்கூடாது'

மைக்கேல் ஜீவா எழுதிய கடிதம்:எனக்கு செய்த துரோகத்திற்கு நீ - ராஜா - அனுபவிப்பாய். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கே. பிள்ளைகளை, 'தரித்திரம்' என, சொன்ன போதே நான் நொறுங்கி விட்டேன். நீ இதுக்கெல்லாம் அனுபவிப்பாய்.எனக்கும், அவருக்கும் - பெயர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார் - கள்ளத்தொடர்பு இல்லை. இதற்கெல்லாம் என்னையும், குழந்தைகளையும் பாடாய் படுத்தியதற்கு அனுபவிப்பாய்.இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், 'ராணி அக்கா, தீபா... தெரிஞ்சோ, தெரியாமலோ நான் செய்த தவறுகளை மன்னிச்சுடுங்க. அம்மாவ பார்த்துக்கோங்க. எங்களை அனாதை போல் எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X