ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்:கடலுார் அருகே, லஞ்சம்வாங்கிய மின் வாரிய அதிகாரியை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வெச்சூரைச் சேர்ந்தவர் தமிழினியன், 45; லால்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில், வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
வீராணம் ஏரிக்கரை கிராமமான, கொள்ளுமேட்டைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 35. இவர், தன் பெட்டிக் கடைக்கு, மின் இணைப்பு கோரி, 2017, ஆக., மாதம், லால்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். இதற்கு, தமிழினியன், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில், இளஞ்செழியன் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை, நேற்று காலை, இளஞ்செழியன், அலுவலகத்தில் இருந்த தமிழினியனிடம் கொடுத்தார்.மறைந்து இருந்த, டி.எஸ்.பி., மெர்லின் ராஜாசிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், தமிழினியனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:20:20 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி கைதானவர்கள் மீது அந்த அந்த துறை ஏதேனும் நடவடிக்கைஎடுக்கிறதா இல்லை வெறும் கண்துடைப்பு விசாரணை நடத்திமீண்டும் பணியில் சேர்த்துவிடுகிறார்களா என்கிற விவரம் தெரிந்தால் தேவலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை