கதவணை என்னாச்சு காவிரி நீர் வீணாகும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதவணை என்னாச்சு காவிரி நீர் வீணாகும்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கொள்ளிடம் ஆற்றில், கதவணை அமைக்கும் திட்டம் தாமதமாவதால், இந்தாண்டும், காவிரி நீர் வீணாகும் அவலம் உருவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் துவங்கும் கொள்ளிடம் ஆறு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலுார் மாவட்டங்கள் வழியாக பயணித்து, வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில், வினாடிக்கு, 3 லட்சம் கன அடிக்கு மேல் நீரை வெளியேற்ற முடியும்.காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால், அதை வெளியேற்றும் வடிகாலாக, கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டினால்,1, டி.எம்.சி., நீரை தேக்க முடியும். இதனால், சுற்றுப் பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.இதை கருத்தில் கொண்டு, 'கொள்ளிடம் ஆற்றில், நாகப்பட்டினம் மாவட்டம், குமாரமங்கலம், கடலுார் மாவட்டம், ஆதனுார் குறுக்கே, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டப்படும்' என, 2015ல், ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்காக, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை.தற்போது, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர், மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால், இந்தாண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என, பொதுப்பணித் துறை கணித்துள்ளது.
இதனால், வழக்கம் போல, இந்தாண்டும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக, காவிரி நீர், கடலுக்கு சென்று வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
14-ஜூலை-201814:19:52 IST Report Abuse
vasumathi கொள் + இடம் . கொள்ளிடம். Mr சம்பத் , அருண்மொழி கொஞ்சம் இதை பற்றி பேச மாட்டீர்களா ? கரைகள் உயரம் கம்மிதான், ஆனால் அகலம் ஜாஸ்தி அதனால், தண்ணீர் தேக்கி எங்கள் ஊர் குளங்களை வற்றாமல் பார்த்து கொள்ளுங்கள்,
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-ஜூலை-201805:32:22 IST Report Abuse
ramasamy naicken ஜெயாவையே மறந்து விட்டார்கள். அவர் அறிவித்த திட்டம்களையா நியாபகம் வைத்து நிறைவேற்ற போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X