விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்:'கோவில்களில் விளக்கு ஏற்றக் கூடாது' என்ற தடையை நீக்கக் கோரி, வழக்கு தொடர, ஆன்மிகவாதிகள் முடிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற, இந்து அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதற்கு ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.விளக்கேற்ற அனுமதி கோரி, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் ஒருங்கிணைப்பு சார்பில், அறநிலையத் துறை உதவி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து, இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது:கோவில்களில் பக்தர்கள், தங்கள் கைகளால் விளக்கேற்றுவது என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள வழிபாட்டு உரிமை. இதன்மூலம் நேரடியாக, கடவுளிடம் பிரார்த்தனை செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது.
தற்போது, இதுவும் மறுக்கப்படுவது, பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல். பொதுமக்கள் பரிகாரம் மற்றும் வேண்டுதல்கள் ஆகியவற்றுக்கு, தங்களது கைகளால், அகல் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றுவது, தவிர்க்க முடியாததாகும்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தங்கள் விருப்பத்துக்கேற்ப, மனம் போன போக்கில், தடை விதிக்க முடியாது. முதல் கட்டமாக மனு அளித்துள்ளோம்.

இதற்கு நடவடிக்கை இல்லா விட்டால், விளக்கேற்ற அனுமதி கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:23:44 IST Report Abuse
Bhaskaran கோவிலில் தீவிபத்தை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் போது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ஒரு அணையாவிளக்கில் எண்ணெய் ஊற்றலாம் அல்லது தனியாக ஒரு அறையில் தீபங்கள் ஏற்ற ஏற்பாடுசெய்யலாம் காலத்துக்கு ஏற்பசில மாறுதல்களை செய்துகொள்ளலாம் குருமார்கள் கவனிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201804:00:52 IST Report Abuse
ஆப்பு வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X