குரங்கணி விபத்துக்கு காரணம்? விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரங்கணி விபத்துக்கு காரணம்? விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, விசாரணை அலுவலரும், வருவாய் துறை முதன்மை செயலருமான அதுல்ய மிஸ்ரா, நேற்று முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்தார்.

தேனி மாவட்டம், போடி தாலுகாவிற்குட்பட்ட, குரங்கணி மலைப்பகுதியில், மார்ச், 11ல், மலையேற்றம் சென்ற, 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில், 23 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரிக்க, வருவாய்த்துறை முதன்மை செயலர், அதுல்யமிஸ்ரா, விசாரணை அதிகாரியாக, மார்ச், 14ல் நியமிக்கப்பட்டார். விசாரணை அறிக்கையை, இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது. நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதுல்ய மிஸ்ரா, தன் விசாரணை அறிக்கையை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்தார்.

அப்போது, வனத்துறை அமைச்சர், சீனிவாசன், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர், முகமது நசிமுதீன், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.அதுல்ய மிஸ்ரா, 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணை அறிக்கை, மூன்று புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளது. பிரதான அறிக்கை, 125 பக்கங்களுடன் உள்ளன.

அறிக்கையில் பரிந்துரை

விசாரணை அறிக்கையில், 'குரங்கணி தீ விபத்திற்கு, வனத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவும் காரணம்' எனவும், மலையேற்றம் சென்றோர், முறையாக பயிற்சி இல்லாத ஆட்களுடன் சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.மலையேற்ற சுற்றுலாவை ஏற்பாடு செய்த நிறுவனங்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளால் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மலையேற்றத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து, மறு ஆய்வு செய்யவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். விபத்து காலங்களில், உடனடியாக நடவடிக்கை எடுக்க, சிறப்பு படையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

'நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தீ எச்சரிக்கை தொழில்நுட்பத்தை, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.'வனப்பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற, மலையேற்ற வீரர்களை நியமிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கருத்துகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X