வண்டிப் பெரியாறில் மீண்டும் வெள்ளம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்டிப் பெரியாறில் மீண்டும் வெள்ளம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:வண்டிப் பெரியாறில் தொடர் மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
கேரள மாநிலம் குமுளி அருகே வண்டிப்பெரியாறில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் கால்வாயில் நீர்வரத்து அதிகமாகி, குமுளி- -கோட்டயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமாக ஓடத் தொடங்கியது. இதனால் மூன்று நாட்களுக்கு முன் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் விடப்பட்டது.
அதன்பின் சற்று குறைந்த மழை நேற்றுமீண்டும் அதிகரித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளம் ஓடத் துவங்கியுள்ளது. காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள், விளைநிலங்களுக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். மாலையில் மழை குறைந்ததால் வெள்ள நீரும் குறையத் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை