எல்லை தாண்டினால் 2 ஆண்டு சிறை நிபந்தனையுடன் மீனவர்கள் விடுதலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை தாண்டினால் 2 ஆண்டு சிறை நிபந்தனையுடன் மீனவர்கள் விடுதலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை விடுவித்த இலங்கை நீதிபதி, 5 ஆண்டுக்குள் எல்லை தாண்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை, என நிபந்தனை விதித்தார்.
ஜூலை 4, 7 ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தேவதாஸ், பிரான்சிஸ், சதீஷ் ஆகியோரது விசைப்படகை இலங்கை வீரர்கள் சிறைபிடித்து, படகில் இருந்த 16 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இம்மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூலை 9 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டும், ஜூலை 11ல் தமிழக முதல்வரை சந்தித்தும் முறையிட்டனர்.இந்நிலையில் நேற்று, மீனவர்கள் 16 பேரையும் இலங்கை ஊர்காவல்துறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இவ் வழக்கில், மீனவர்கள் 16 பேரையும் விடுவித்த நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன், ' வரும் 5 ஆண்டுக்குள் எல்லை தாண்டி இலங்கைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது. மீறி வந்து கைதானால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஜூலை 28 ல் படகு மீதான வழக்கில், உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.இல்லையெனில் படகுகள் அரசுடமையாக்கப்படும், என தெரிவித்துள்ளார்.
விடுதலையான மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மெரிகானா முகாமில் தங்கி உள்ளனர். அவர்கள் ஓரிரு தினங்களில் காரைக்கால் வர உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை