ராமநாதபுரத்தை வட கடலில் சேர்க்க விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தை வட கடலில் சேர்க்க விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், வானிலை எச்சரிக்கையால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வட கடலில் தங்களை சேர்க்குமாறு ஆவேசமாக பேசினர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட தென் கடல் பகுதியுடன் மீன்வளத்துறையினர் சமீபத்தில் இணைத்துள்ளனர். இதனால், இப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
ஜூன் 16ல் மீன் பிடி தடை காலம் முடிந்த நிலையில், 15 முறை செல்ல வேண்டிய நிலையில், இதுவரை ஐந்து முறை மட்டுமே மீன் பிடிக்க சென்றுள்ளனர். வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தங்களை முன்பு போல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மாவட்ட வட கடல் பகுதி மீனவர்களுடன் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, ராமேஸ்வரம் சவேரியார் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயம், ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் எமரிட், மண்டபம் பாலசுப்பிரமணியன், தாகீர் உசேன், பாம்பன் ஜான்சன் உள்பட மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் உள்பட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை வட கடல் பகுதியில் சேர்க்க வலியுறுத்தி ஆவேசமாக பேசினர்.ராமேஸ்வரம் சவேரியார் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், 'நாங்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கிறோம். இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுகிறோம். இப்பகுதி வட கடல் பகுதியில் தான் வர வேண்டும்.

எங்களை, கன்னியாகுமரி மாவட்டத்துடன் தென் கடல் பகுதியில் சேர்த்தது தவறு. இதனை மாற்றி, வட கடல் பகுதியில் சேர்க்க வேண்டும். தவறினால், நாங்கள் மீன்வளத்துறை அனுமதி பெறாமல் செல்லும் நிலை ஏற்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை