சிவகங்கையில் சிக்குன்குனியா குடிநீரை தேக்குவதால் பரவுது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் சிக்குன்குனியா குடிநீரை தேக்குவதால் பரவுது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே ஊரோடு கிராமத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு உள்ளது. குடிநீரை தேக்குவதால் பரவுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வாணியங்குடி ஊராட்சி அண்ணாநகர், சீனிவாசநகர் பகுதியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிகளில் ஒரு மாதமாக சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது.காய்ச்சல் பாதித்தோர் மூட்டு வலியால் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். பாப்பா, லதா, அழகுமுத்து, பிருந்தாதேவி, செல்வி, இனியன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குடும்பத்தோடு பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே முடங்கினர். சுகாதாரத்துறையினர் தொடர்ந்து முகாமிட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது: இரண்டு வாரங்களுக்கு முன் காய்ச்சல் பரவியது. பாதிக்கப்பட்டோர் குணமடைந்துவிட்டனர். தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வருகிறோம். குளோரினேசன் செய்யாத குடிநீரை வினியோகம் செய்தது, டிரம்களில் தண்ணீரை சேமித்து வைத்ததால் சிக்குன்குனியா பரவியது. காய்ச்சி குடிக்க வலியுறுத்தியுள்ளோம். சிவகங்கை ஒட்டிய பகுதி என்பதால், நகராட்சி மக்களுக்கும் பரவாமல் கண்காணித்து வருகிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X