உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில பிரிவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில பிரிவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி பிரிவுகளை விரிவுபடுத்த கோரி தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச்செயலர் கனகராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆங்கில திறனை மேம்படுத்த முதல் வகுப்பு மற்றும் ஆறாவது வகுப்பில் தலா இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் துவக்கப்படும்.படிப்படியாக பிளஸ் 2 வரை ஆங்கிலவழி பிரிவுகள் துவக்கப்படும். 'முதற்கட்டமாக 2012-13 கல்வியாண்டில் 320 அரசு பள்ளிகளில் துவக்கப்படும்' என 2012 ஜூலை 17 ல் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனால் கட்டணம் இன்றி ஏழை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி பெறுகின்றனர்.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இதனால் 'நீட்' உட்பட போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியும்.உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் உபரி ஆசிரியர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர உதவும். உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி பிரிவுகளை ஏற்படுத்தக்கோரி பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனகராஜ் மனு செய்தார். நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.தாரணி அமர்வு இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X