மதுரை சிறைக்குள் திடீர் சோதனை தடை பொருட்கள் சிக்காததால் ஏமாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை சிறைக்குள் திடீர் சோதனை தடை பொருட்கள் சிக்காததால் ஏமாற்றம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை மத்திய சிறையில் போலீசுடன் இணைந்து சிறைத்துறையினர் 2 மணி நேரம் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்காதது ஏமாற்றமளித்தது.இச்சிறையில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையை சுற்றி ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் வெளியிலிருந்து கஞ்சா போன்ற பொருட்களை வீசுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நீதிமன்றங்களுக்கு சென்று திரும்பும் கைதிகள் நுாதன முறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதாக சிறைத்துறையினர் சந்தேகித்தனர். டி.ஐ.ஜி. பழனி தலைமையில் திலகர்திடல் உதவி கமிஷனர் வெற்றிசெல்வன், போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு, சிறை அலுவலர் ஜெயராமன் தலைமையில் 124 போலீசார், 52 சிறை காவலர்கள், 13 சிறை அதிகாரிகள் நேற்று காலை 6:30 முதல் 8:30 மணிவரை ஒவ்வொரு செல் வாரியாக சோதனையில் ஈடுபட்டனர். கைதிகளையும் பரிசோதித்தனர். ஆனால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:17:53 IST Report Abuse
Mani . V தலைப்பை பார்க்கையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை அதிகாரிகளாலேயே சப்ளை செய்யப்படுவது புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை