பெரியாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 3 அடி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர்மட்டம் 3 நாளில் 3 அடி உயர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:நீர்பிடிப்பில் பெய்து வரும் கனமழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 3598 கன அடியாக இருந்தது. ஜூலை 10 ல் 122.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 3 அடி வரை உயர்ந்து நேற்று காலை 125.50 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 3683 மில்லியன் கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு 1367 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெரியாறில் 52.2 மி.மீ., தேக்கடியில் 42.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடரும் மழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மழை காரணமாக தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை