விபத்தில் புதுப்பெண் அவரது அண்ணன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் புதுப்பெண் அவரது அண்ணன் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:கடையநல்லுார் அருகே டூவீலர் மீது பஸ் மோதிய விபத்தில் திருமணமாகி 10 நாளான புதுப்பெண், அவரது அண்ணன் பலியாயினர்.
திருநெல்வேலி, மேலக்கடையநல்லுாரை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகள் ஹேமலதாவிற்கும், சுரண்டையை சேர்ந்த செல்வராஜ்க்கும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று மகள், மருமகனுடன் இலத்துாரில் உள்ள கோயிலுக்கு சென்றனர். நேற்று மாலை 4:00 மணிக்கு ஊருக்கு திரும்பினர்.
பரமசிவன் ஓட்டிய டூவீலரில் அவரது மருமகன் செல்வராஜூம், பரமசிவனின் மகன் சுந்தரபாலாஜி 24, (ஹெல்மெட் அணியவில்லை )ஓட்டிய டூவீலரில் அவரது தங்கை ஹேமலதாவும் வந்தனர்.கடையநல்லுார் அருகே மங்களாபுரத்தில் வந்த போது, புளியங்குடியில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் சுந்தரபாலாஜி டூவீலர் மீது மோதியது. இதில் அண்ணன், தங்கை இருவரும் பஸ்சுக்குள் சிக்கி பலியாயினர். கடையநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X