கால்நடை வளர்ப்பு பயிற்சி கால்நடை பல்கலை ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்பு பயிற்சி கால்நடை பல்கலை ஏற்பாடு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் - தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் சார்பில் பல்கலை சான்றிதழுடன் ஒரு மாத கால கறவை மாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் சேர விரும்பும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தோர் ஜூலை 16 க்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்குவோர், பெண்கள் கலந்து கொண்டு பயனடையலாம். கால்நடை பண்ணைகளில் களப்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரமறிய 0452 -248 3903 ல் தொடர்பு கொள்ளலாம், என கால்நடை பல்கலை தலைவர் பேராசிரியை ரா.உமாராணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை