பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பாதிரியார்கள் கைது மேலும் இருவர் தலைமறைவு| Dinamalar

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பாதிரியார்கள் கைது மேலும் இருவர் தலைமறைவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம்:பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் நேற்று மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைது எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
கேரள மாநிலம் பத்தணம்திட்டை மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண் திருமணத்துக்கு முன் நடைபெற்ற சம்பவத்துக்காக பாவ மன்னிப்பு கேட்க வந்தார். இதை கேட்ட பாதிரியார், அதை கணவரிடம் சொல்லிவிடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மூன்று பாதிரியார்களுக்கும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மூவரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பாதிரியார் ஜோப் மேத்யூ நேற்று முன்தினம் போலீசில் சரணடைந்தார். அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மற்றொரு பாதிரியாரான ஜான்சன் வி மேத்யூவை, நேற்று பத்தணம்திட்டை கோழஞ்சேரியில் அவரது வீட்டில் தனிப்படையினர் கைது செய்தனர். மாலையில் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்ற இரு பாதிரியார்கள் சோணி வர்கீஸ், ஜெய்ஸ் கே ஜார்ஜ் ஆகிய இருவரும் சரணடைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது செய்யப்படுவர் என்ம் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X