சேலத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்:'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்:'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:சேலத்தில் நடக்க உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, ஆக., 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், ஆக., 22ல் துவங்கி செப்., 2ம் தேதி வரை நடக்கிறது. கோவை, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, தகுதியான நபர்கள் பங்கேற்கலாம்.
'சோல்ஜர் டெக்னிக்கல்', 'சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன்', 'சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட்', 'சோல்ஜர் ஜெனரல் டியுட்டி', 'சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர்', 'சோல்ஜர் டரேட்ஸ்மேன்' ஆகிய பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள, www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில், தற்போது முதல், ஆக., 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக., 10ம் தேதிக்கு பிறகு 'ஆன்லைனில்' அனுமதி சீட்டு வழங்கப்படும். விண்ணப்பதாரர் தங்களது அனுமதி சீட்டு, விண்ணப்பம் மற்றும் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன், ஆட்கள் சேர்ப்பு முகாமிற்கு வரவேண்டும். வரவேண்டிய நாள் விவரம், அனுமதி சீட்டில் தெரிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, 'ஆர்மி காலிங்' என்ற 'மொபைல் ஆப்' மூலமாகவும், 0422 2222022 என்ற எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X