பெண் உட்பட 2 பேருக்கு ஆயுள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் உட்பட 2 பேருக்கு ஆயுள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு பெண் உட்பட 2 பேருக்குஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கரிமேடு கண்மாய்க்கரை ராஜகோபால் மனைவி உமாராணி,37. இவருக்கும், காளவாசல் பாண்டியன் நகர் துரைப்பாண்டிமனைவி பிரேமாவுக்கும்,36,இடையே பணம்கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் ஏற்பட்டது.பிரேமா அவனியாபுரம்பழைய பேப்பர் கம்பெனியில் வேலை செய்தார்.அங்கு பணத்தை தருவதாககூறி உமாராணியை, பிரேமா அழைத்து வந்தார்.
கம்பெனியில் வேலை செய்த துாத்துக்குடிசாத்தான்குளம் வேல்முருகனிடம்,40, உமாராணி பேசிக் கொண்டிருந்தபோது, கம்பியால் தலையில் பிரேமா தாக்கியதில் உமாராணி இறந்தார். அவரது 15 பவுன் நகையை கழற்றிக்கொண்டு உடலை பாலிதீன் பையில் இட்டு பிரேமாவும், வேல்முருகனும் தலைமறைவாகினர்.
அவர்களை கரிமேடுபோலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரைமூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X