சோழவரம் முருகன் கோயிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோழவரம் முருகன் கோயிலில் மரகத சிலை, வெள்ளி வேல் மாயம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை,சோழவரம் அருகே, தங்கவேல் முருகன் கோயிலில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எடப்பாளையத்தில், தங்கவேல் முருகன் கோயில் உள்ளது.இந்த கோயிலை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சிவகுமார், 75, என்பவர் கட்டியுள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி, கோவிலை பராமரிக்கிறார்.
இக்கோயிலில், கற்சிலையால் வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றுள்ளார். 1 அடி உயரமும், 1 கிலோ எடையும் உடைய, முருகன் மரகத சிலையும் இருந்தது.வெள்ளிக்கிழமைமற்றும் விசேஷ நாட்களில், மூலவர் சன்னதியில் வைத்து, மரகத சிலைக்கும் அபிஷேகம் நடைபெறும் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமானதாக, சிவகுமார், சோழ வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது, மரகத சிலை கிடைத்தது. இதனால், இங்கேயேமுருகன் கோயில் கட்டி, பராமரிக்கிறேன்.நேற்று காலை, பூஜைக்காக, வெள்ளி தட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலுடன் இருந்த மரகத சிலை மாயமாகியுள்ளது, என்றார்.

திருடு போனமரகத சிலை, பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என, கூறப்படுகிறது. சோழவரம் போலீசாரும், சிலை கடத்தல் பிரிவு போலீசாரும், தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
14-ஜூலை-201818:58:00 IST Report Abuse
B Srinivasan மொத்தமாக எந்தஎந்த கோவில்களில் என்ன என்ன காணவில்லை எத்தனை சிலைகள் காணவில்லை என்று ஒரு லிஸ்ட் எடுத்து ஒரு புத்தகமாக போட்டு எல்லா தமிழர்களுக்கும் கொடுத்தால் மிகவும் வசதி. மீதி உள்ள சாமிகளை கும்பிட்டுக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை