தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்:விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்:விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை:''விவசாயிகள் வேளாண் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலம், தரமான விதைகள் உற்பத்தியை மேற்கொள்ளலாம்,'' என்று விதைச்சான்று இணை இயக்குனர் செல்வராஜ் கூறினார்.வேளாண்துறை சார்பில் மக்காச்சோளம், நிலக்கடலை, பயறு வகை பயிர்கள், பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் விதைப்பண்ணைகள் அமைத்து, சான்று விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் விதைப்பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டு, விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்ட மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விதைப்பண்ணை, சுத்திகரிப்பு நிலையங்கள் என ஒவ்வொரு கட்டத்திலும், விதைச்சான்றுத்துறை சார்பில் ஆய்வு செய்து சான்று வழங்கப்படுகிறது. இவ்வாறு, உற்பத்தி செய்யப்படும் விதைகள் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு தரமான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விற்கப்படுகிறது.
தற்போது, விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளுக்கு விதைச்சான்றுத்துறை சார்பில் பயிற்சி நடந்தது. விதைச்சான்று இணை இயக்குனர் செல்வராஜ் பேசுகையில், ''விதைச்சான்று உற்பத்தியின் அவசியத்தையும், தரமான விதைகள் உற்பத்தி குறித்தும் விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகளே, வேளாண்துறை மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலம் தரமான விதைகள் உற்பத்தியை மேற்கொள்ளலாம்,'' என்றார்.
விதைச்சான்று நடைமுறைகளை கவனத்துடனும், சரியான முறையிலும் பின்பற்ற வேண்டும். தரமான விதைகள் உற்பத்தியே சிறந்த விளைச்சலுக்கு வழிவகுக்கும். அனைத்து விவசாயிகளின் நலன்களை மனதில் வைத்து விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம் பேசினார்.
தொடர்ந்து, விதைப்பண்ணை திட்டத்தில் பதிவு செய்தல், விதைப்பு அறிக்கை, சுத்திகரிப்பு அறிக்கைகள் மற்றும் விதைக்குவியல் முத்திரை இடுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.அதில், விதைச்சான்று உதவி இயக்குனர் சிவக்குமார், விதைச்சான்று அலுவலர்கள் ராஜேஸ்வரி, வளர்மதி, கண்ணாமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை