மசாஜ் விவகாரம்: சி.இ.ஓ., விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மசாஜ் விவகாரம்: சி.இ.ஓ., விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், அரசு பள்ளி மாணவரை மசாஜ் செய்ய வைத்ததாக எழுந்த புகார் குறித்துவிளக்கம் அளிக்க ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., சாந்தகுமார் உத்தரவிட்டார்.ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அரசு பள்ளிஆசிரியர் இளங்கோ. இவருக்கு மாணவர் மசாஜ் செய்வது போன்ற வாட்ஸ்ஆப் வெளியானது. நாடக ஒத்திகையில் எடுத்த படத்தை அதே பள்ளி தமிழாசிரியர் ரங்கராஜன் துாண்டுதலில் வெளியிட்டதாக புகார் தெரிவித்தார். இதனை ரங்கராஜன் மறுத்தார்.இந்நிலையில் வாட்ஸ்ஆப் படம் வைரலாக பரவியது. இப் பிரச்னை குறித்து விசாரிக்க முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் நேற்று முன்தினம் பள்ளியில் சர்ச்சை ஆசிரியர்கள் இருவரிடமும், தலைமையாசிரியர் சேவியர் தன்ராஜிடமும் விசாரணை நடத்தினார். இரு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், ஆசிரியர்களிடம் பெறும் பதிலை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X