பள்ளி மாணவருக்கு வாகன வசதி:: திருப்பூரில் அசத்திய அமைப்பினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவருக்கு வாகன வசதி:: திருப்பூரில் அசத்திய அமைப்பினர்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


திருப்பூர் அருகே போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்களிலிருந்து, பள்ளிக்கு இலவச வாகன வசதியை, பெற்றோர் ஆசிரியர் கழகம் உட்பட ஐந்து அமைப்பினர் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், 249 மாணவர், மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர்.அருகிலுள்ள குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையம் பள்ளிக்கு, 2.5 கி.மீ., துாரம் என்பதால், மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இதுகுறித்து, பெற்றோரிடம் நிலையை கூறிய ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வைத்தனர்.இந்நிலையில், குளத்துப்பாளையத்தில் இருந்து வரும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னையர் குழு, தலைமை ஆசிரியர், கல்வியாளர்கள், முகநுால் நண்பர்கள் ஆகியோர் இணைந்து, இலவச வேன் வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.இதன் துவக்க விழா, நடந்தது. ஊத்துக்குளி வட்டார கல்வி அலுவலர் வசந்தி கொடியசைத்து, இலவச வேன் சேவையை துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமையாசிரியர் அகிலா கூறுகையில், ''தினமும் குளத்துப்பாளையம் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீடு,வீடாகச்சென்று ஒன்று முதல் ஐந்தாவது வரை படிக்கும் பள்ளிக்குழந்தைகள் அழைத்து வரப்படுவர். அதேபோல், மாலையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். வேன் வாடகையை, மொத்தம் ஐந்து அமைப்பினர் மாதந்தோறும் பகிர்ந்து கொள்வர்,'' என்றார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை