20 லட்சம் தாய்-சேய்க்கு இலவச ஊர்தி சேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

20 லட்சம் தாய்-சேய்க்கு இலவச ஊர்தி சேவை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், 'தமிழகத்தில்20 லட்சம் தாய் - சேய்கள், 5 லட்சத்து 40 ஆயிரம் உடல்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது' என, அமரர் ஊர்தி மாநிலக்குழு தலைவர் ஜான் கூறினார்.திண்டுக்கல்லில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாமை துவக்கி வைத்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் 161 அமரர் ஊர்திகளும், 158 தாய் சேய் நல ஊர்திகளும் இயக்கப்படுகின்றன.இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் உடல்களும், 20 லட்சம் பிரசவமான தாய்-சேய்களும் அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி, பிரசவத்திற்கும் உதவி வருகிறோம். உடல்களை எடுத்து செல்லும் ஓட்டுனர்களின் மன அழுத்தம் இருக்கும். இதனை போக்க மாநிலம் முழுவதும் ஓட்டுனர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்குகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை